IPL 2023 – PK: அதிரடி லைன்அப், அசாத்திய கூட்டணிகள்; இந்த முறையாவது சாதிக்குமா பஞ்சாப் கிங்ஸ்? – IPL 2023: Punjab Kings Team Analysis and Preview
அவருடன் சேர்ந்து துவக்கம் தர வேண்டியவர் ப்ரப்சிம்ரன் சிங். நடந்து முடிந்த சையது முஷ்டக் அலி தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்தார். அனுபவம் வாய்ந்த தவானுடன் இணைந்து இவர் தரும் தொடக்கம்தான் பஞ்சாப் அணியின் பவர்பிளே ஸ்கோரை முடிவு செய்யப் போகிறது.அடுத்ததாக இந்த அணியின் மிடில் ஆர்டர். பனுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டன், தமிழகத்தின் ஷாருக்கான் என அதிரடியாகக் காட்சி தந்தாலும் உள்ளே சற்று உற்று நோக்கினால் ஸ்ரீகாந்த் கூறுவது போல ‘பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம்’…