Daily Archives: April 1, 2023

Doctor Vikatan: வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, உடல் எடையைக் குறைக்குமா நெல்லிச்சாறு?

Doctor Vikatan: உடல் பருமனைக் குறைக்க ஆலோசனை மையங்களில் நெல்லிச்சாறு தருகிறார்கள். அதைப் பருகுவதால், தொடர்ச்சியான வயிற்றுப்போக்குடன், நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு உடல் எடையைக் குறைப்பது ஆரோக்கியமானதா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநெல்லிக்காய் என்பது அற்புதமான, அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் கொண்டது. வைட்டமின் சி அதிமுள்ள நெல்லிக்காய், நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தக்கூடியது. உடல் பருமனைக் குறைப்பதற்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது. நெல்லிச்சாறு குடிப்பதால்…

IPL 2023 Preview – DC: கோச் பாண்டிங், கேப்டன் வார்னர்; டெல்லியை அரியணையேற்றுமா இந்த ஆஸ்திரேலிய இணை? | IPL 2023: The complete team preview of Delhi Capitals

2010-க்குப் பின் பல்லாண்டுகளாக ஒளியை விழுங்கும் குகைக்குள் அடையாளமின்றி பயணித்து வந்தது டெல்லி. துருவ நட்சத்திரமான பாண்டிங்கின் வரவுக்குப் பின்தான் வெளிச்சமே தென்பட்டு பிளே ஆஃப் வரவேற்பையே பெறவும் தொடங்கியது. 2020-ல் ஸ்ரேயாஸால் இறுதிப் போட்டியை எட்டிய அணியை பண்ட் சாம்பியனாக்குவார் என எதிர்பார்ப்பு நிலவ, சற்றே சரிவைச் சந்தித்த அணி கடந்த சீசனில் 50 சதவிகிதம் வெற்றியோடு ஐந்தாவது இடத்தில் முடித்தது. இம்முறையோ பன்முக வீரரான பண்ட்டின் வல்லமையோடு ஆளுமையையும் ஒருங்கே இழந்து டெல்லி தடுமாறுகிறது.…

 கோடைக்காலம் வந்தாச்சு.. உடல் சூட்டைக் குறைக்க இந்த உணவுகளை மறக்காமல் எடுத்துக்கோங்க.!

குஸ் குஸ் புல்லின் வேர்களில் இருந்து தயாரிக்கப்படும் குஸ் சர்பத், உங்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது. நன்றி

விடுதலை திரைப்படம்: “படம் அல்ல, ரசிகர்களின் கனத்த உணர்வு” சீமான், திருமாவளவன் பாராட்டு

பட மூலாதாரம், VIDUTHALAI MOVIEஒரு மணி நேரத்துக்கு முன்னர்வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின்…

பால் உற்பத்தியாளர் கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பால் வழங்க மறுத்து உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டமும், அம்பத்தூர் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும் தான் ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கும், குறித்த காலத்தில் கிடைக்காததற்கும் காரணம் என்று கூறப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமலும், உரிய காலத்திலும், அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட வேண்டியது கட்டாயம். எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு ஆவின்…

திருமணத்திற்கு பின் முகத்தில் ஏற்பட்ட மாற்றம்: தாடி, மீசையுடன் வாழும் பெண்ணை விவாகரத்து செய்த கணவன் | Change in face after marriage: Husband who divorced woman living with beard and moustache

பெண்களுக்கு மிகவும் அபூர்வமாக முகத்தில் தாடி, மீசை வளர்வதுண்டு. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு அது போன்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இப்போது அவர் புதுவாழ்வு வாழ்கிறார்.மந்தீப் கவுர் என்ற பெண்ணிற்கு, கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் கழித்து திடீரென மந்தீப் கவுர் முகத்தில், தாடி மற்றும் மீசை வளர ஆரம்பித்தது. இதனால் அவரின் கணவர் அவரை வெறுக்க ஆரம்பித்தார். மந்தீப் கவுர், மற்ற பெண்களைப்போல் வெளியில் செல்ல முடியவில்லையே…

IPL 2023: CSK vs GT | சறுக்கிய சிஎஸ்கே – முதல் வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 179 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சுப்மன் கில் – சஹா இணை துவக்கம் கொடுத்தது. சஹா நான்கு ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்ததாலும் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில்…

சுட சுட இட்லிக்கு ஜோடியா ஒரு அசத்தல் சாம்பார் ரெசிபி! | My Vikatan | My Vikatan cooking article on hotel sambar recipe

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். தமிழனின் வாழ்வியல் முறையில் இருந்து பிரிக்க முடியாத ஒரு உணவு இட்லி.அரிசியும், உளுந்தும் ஜோடி சேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்வது இட்லி.இட்லி… தேவலோக அமிர்தம்.சுடச்சுட ஆவி பறக்கும் இட்லி…தொட்டுக்கொள்ள… வெள்ளை சட்னி, கார சட்னி, புதினா சட்னி,…

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. Source link

பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு

சென்னை: பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவைகளை குறித்து பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆளும் கட்சியான பாஜ முடக்குகிறது என முகுல் வாஸ்னிக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்நிக் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது ஆளும் கட்சியான பாஜ தான். பணவீக்கம், விலைவாசி உயர்வு பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை குறித்து பேசாமல் தவிர்க்கின்றனர்.ராகுல்…