ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ: தி.மு.இராசேந்திரன் அறிக்கை.!
சென்னை: ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் தலைவர் வைகோ என மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது. தலைவர் வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா இந்த நேர்காணலில் ஈழப்பிரச்சினை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும்…







