Doctor Vikatan: ஒருவருக்கு அதிகபட்சமாக எத்தனை முறை ஹார்ட் அட்டாக் வரும்? | Doctor vikatan – What is the maximum number of heart attacks a person can have?
மேஜர் அட்டாக் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதயத்தின் தொடக்கத்தில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதையே மேஜர் அட்டாக் என்கிறோம். சிலருக்கு வேறு இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரிந்திருக்காது. வேறு ஏதேனும் விஷயத்துக்காக இசிஜி எடுக்கும்போதுதான், அவருக்கு ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்ததே தெரிய வரும். எனவே பிரதான ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும்போதுதான் அதன் விளைவாக வரும் ஹார்ட் அட்டாக்கை சம்பந்தப்பட்டவர் உணர்வார்.இன்னும் சிலருக்கு நெஞ்சுவலி வந்திருக்கும். ஆனால் அதை…









