அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார்: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பூந்தமல்லி:அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவேற்காடு நகர திமுக சார்பில், நேற்று திருவேற்காடு நகராட்சி அலுலவகம் அருகே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நகர செயலாளரும் நகரமன்ற தலைவருமான என்இகே.மூர்த்தி தலைமை தாங்கினார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, வி.பி.ராஜன் ஆகியோர் முன்னிலை…








