BAN vs ENG | டி20 தொடரில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது வங்கதேசம்: 3-0 என தொடரை கைப்பற்றிய குட்டி புலி கூட்டம் | bangladesh whitewash world champions england in t20i series 3 nil dhaka
டாக்கா: நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து கிரிக்கெட் அணியை டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது வங்கதேசம். இந்த வெற்றி அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது. டாக்கா நகரில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக விக்கெட்…









