பெண்களின் சிறுநீர்த்தொற்று பிரச்னை; காரணங்களும் தீர்வுகளும்! | Visual Story
உடல் ரீதியான பிரச்னைகளை வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டுவதுண்டு. அப்படியான ஒரு பிரச்னைதான், சிறுநீர்த்தொற்று. சிறுநீர்த்தொற்று என்பது பெண்களுக்கு அதிகம் வர வாய்ப்புள்ள, அதேசமயம் அவர்கள் அலட்சியப்படுத்தும் ஓர் உடல்நலப் பிரச்னை. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் சரியாகக் கழிக்க முடியாமல் வலி ஏற்படுவது, முழுமையாக சிறுநீர் கழித்த உணர்வின்மை போன்றவை சிறுநீர்த்தொற்றின் அறிகுறிகள்.காரணங்கள்: தேவையான அளவு தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளாதது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பது. நோய் எதிர்ப்பு…