`வெரிகோஸ் வெயின் உயிரை பறிக்காது, ஆனால்…’ – சென்னையில் விழிப்புணர்வு பேரணி! | Varicose vein awareness rally
வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்… “வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது, புற்றுநோய்…