சத்துமாத்திரையால் பலியான மாணவி, 11 கிராம் இரும்புச்சத்தால் நேர்ந்த சோகம்; பள்ளியில் நடந்தது என்ன?
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள காந்தள் பகுதியில் நகராட்சியின் உருதுப் பள்ளி இயங்கி வருகிறது. 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்தப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர், மற்றும் 6- வகுப்பு மாணவர்கள் 2 பேர் என 6 பேருக்குக் கடந்த வாரம் திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்ட ஆசிரியர்கள் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரிக்கு 6 பேரையும் உடனடியாக அழைத்துச் சென்றனர். குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சத்து…