Monthly Archives: February, 2023

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாரூப் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி 12 ரன்களும், ஜவேரியா கான் 8 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மாரூப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 56…

எடை இழப்புக்கு உதவும் சிறந்த எண்ணெய்கள் இவை தான்.! டயட்டில் இனிமேல் இதில் சமைத்து சாப்பிடுங்கள்.!

நீங்கள் எடையை சீக்கிரம் குறைக்க விரும்பினால் மீன் எண்ணெய், ஆளி எண்ணெய், பாமாயில் மற்றும் வால்நட் ஆயில் போன்ற எண்ணெய்களைத் தவிர்க்க வேண்டும். நன்றி

தாம்பத்தியத்தை பாதிக்கும் வயது வித்தியாசம்… தீர்வு என்ன? | காமத்துக்கு மரியாதை – S3 E28

எனக்கு 40 வயது. அவருக்கு 58. திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. திருமணமானவுடனே குழந்தைகளை, வீட்டுப் பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என பிஸியாகவே இருந்துவிட்டேன். கணவரும் வேலை வேலை என்று இருந்துவிட்டார். இப்போது பிள்ளைகளெல்லாம் வளர்ந்துவிட்டதால், பொறுப்புகள் குறைந்துவிட்டன. தாம்பத்திய உறவை அனுபவித்து வாழ ஆசையாக இருக்கிறது. ஆனால், கணவரால் இயலவில்லை. என்ன செய்வது ? – வாசகி ஒருவரின் பிரச்னை இது. தீர்வு சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.Dr. Narayana Reddy`புராஸ்டேட் கேன்சர்… விறைப்புத்தன்மை குறைய காரணமாகுமா?’ – காமத்துக்கு…

இடைத்தேர்தல் பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மேலும் 6 பேர் சேர்ப்பு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் மேலும் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேலும் 6 பேர் சேர்க்கப்படுகிறார்கள். அதன்படி, ஜே.எம்.எச். அசன்…

ஆஸ்திரேலிய அணி பயிற்சி செய்ய அனுமதி கோரிய மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு – ஆட்ட உணர்வற்ற செயல் | Australia’s plans to train in Nagpur scuppered after ground staff water pitches

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நாக்பூர் மைதானத்தில் இன்று பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், அந்த மைதானத்தில் தண்ணீரை தெளித்த விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெறும் 91 ரன்களில் மடிந்தது. முதல்…

மாக்டெயில், சூப், ஸ்பிரிங் ரோல்… வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் சுவை உணவுகள்… | வீக் எண்டு ஸ்பெஷல்

வீக் எண்டு என்றாலே வெளியே போய் தான் சாப்பிட வேண்டும் என்பது சில குடும்பங்களின் எழுதப்படாத விதி. ‘ஒரே மாதிரி சாப்பிட்டு போரடிக்குதுல்ல… ஒரு மாறுதலுக்கு புது டேஸ்ட்டுக்காக ரெஸ்டாரன்ட்டை தேடிப் போறோம்’ என்பது அவர்களது பதிலாகவும் இருக்கும். ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் அதே புதுவித சுவை உங்கள் வீட்டு கிச்சனிலும் சாத்தியம். இந்த வார வீக் எண்டை வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் உணவுகளைச் சமைத்து ஸ்பெஷலாக்குங்கள்…பெர்ரி மாக்டெயில்தேவையானவை:ஸ்ட்ராபெர்ரி – 6ப்ளூபெர்ரி – 5இஞ்சி – ஒரு சிறிய துண்டு…

அதானி ஸ்பான்சர் செய்த விருதை வாங்க மறுத்த கவிஞர் சுகிர்தராணி: “வெளிச்சத்துக்காக செய்யவில்லை”

திவ்யா ஜெயராஜ்பிபிசி தமிழ்19 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Sukirtha Rani/FBபடக்குறிப்பு, சுகிர்தராணி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தனக்கு அறிவித்திருந்த ‘தேவி’ விருதை வேண்டாம் என கூறியிருக்கிறார் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அதானி குழுமம் முதன்மையான ஸ்பான்சராக இருந்ததுதான் தான் விருதினை மறுப்பதற்குக் காரணம் என்கிறார் அவர். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் பெண் ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘தேவி’ என்ற விருதை…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிரபலங்களால் சூடுபிடிக்கும் பிரசாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கவுள்ளது. ஜனவரி 18ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அடுத்த நாளே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், வீட்டுவசதி துறை அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக உள்கட்சி குழப்பம் காரணமாக நீண்ட இழுப்பறிக்கு பின்னர் வேட்பு மனுத் தாக்கலின் இறுதி நாளன்றே…

ஆஸ்திரேலிய அணியை மிரட்டிய ஸ்பின்னர்கள்… அஷ்வின் – ஜடேஜாவுக்கு மீம்ஸ்கள் மூலம் பாராட்டு…

ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களை சுழற்பந்து வீச்சில் மிரட்டி அஷ்வின் – ஜடேஜா இணைக்கு சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடலின் மீம்ஸ் வெர்ஷன் ரசிக்கும்படியாக உள்ளது. இதனை அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள்…

1 33 34 35 36 37 61