Nepal: பாலியல் வழக்கில் சிக்கிய சந்தீப் லமிச்சானுடன் கைக்குலுக்க மறுத்த ஸ்காட்லாந்து வீரர்கள்! | Scotland cricketers refuse to shake hands with rape-accused Sandeep Lamichhane
நேபாளத்தின் கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம் – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்குப்பின் ஸ்காட்லாந்து வீரர்கள் நேபாள நாட்டு அணி வீரர்களுடன் கைகுலுக்கினர். ஆனால் நேபாள வீரரான சந்தீப் லமிச்சானுடன் பலரும் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நேபாளம் – ஸ்காட்லாந்து அணிகள்நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவர் சந்தீப் லமிச்சான். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.…









