உப்புமா கதை சொன்ன திருச்சி சிவா; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை! | DMK MP Trichy Siva teased BJP by Upma story in rajya sabha
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று தி.மு.க எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்று கூறி விமர்சிக்க அவையே சிரிப்பலையில் மூழ்கியது.நாடாளுமன்றம்தன்னுடைய உரையின்போது உப்புமா கதை சொல்லத்தொடங்கிய திருச்சி சிவா, “ஒரு கல்லூரி விடுதியில் எல்லா நாள்களும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனால் எரிச்சலடைந்த மாணவர்கள் உப்புமா வேண்டாம் எனப் போராட்டத்தில் இறங்கினர். வார்டனுக்கு என்ன செய்வதென்று ஒரு வழியிலும் தெரியவில்லை. பிறகு வார்டன், `வாக்கெடுப்பு நடத்துகிறேன் உங்களுக்கு என்ன வேண்டும்?’…









