Monthly Archives: January, 2023

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் ராஜினாமா… உலகக்கோப்பை தோல்வியால் முடிவு

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு கூட முன்னேற முடியாத நிலையில் அவர் இந்த முடிவை இன்று அறிவித்திருக்கிறார். உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த ஃபைனல் மேட்ச்சில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம்…

குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை பட்டாணி… உணவில் தினமும் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும்..?

பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. நன்றி

தொலைதூர கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் பெண்கள்

மகாராஷ்டிராவின் தொலைதூர மாவட்டமான கட்சிரோலியில், முப்பது ஆண்டுகளாக அமைதியாக ஒரு புரட்சி நடந்துள்ளது. இது அந்த வட்டாரத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியதோடு, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியது. ஆம்ஹி ஆமச்சயா ஆரோக்யசதி அமைப்பின் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் பழங்குடி கிராமத்தில் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணத்தை தடுத்துள்ளனர். பழங்குடி கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவையை அளித்து, ஊட்டச்சத்து குறைபாடுயுடைய குழந்தைகளின் நலனை பேணிக்காத்து வருகின்றனர். …

மதவெறி பித்து பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு அநாகரிக அரசியலில் ஈடுபடுவதா? பாஜ தலைவர் அண்ணாமலைக்கு திமுக கண்டனம்

சென்னை: மதவெறிப் பித்துப் பிடித்து-மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பாஜ தலைவர் அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக எச்சரித்துள்ளது. இதுகுறித்து, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று…

திடீரென பரவும் சளி, காய்ச்சல்… என்ன காரணம்; தற்காத்துக் கொள்வது எப்படி? மருத்துவ விளக்கம் | spread of cold, fever – what is the reason

கொரோனா பயத்திலிருந்து சற்று மீண்டிருக்கிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, தும்மல், இருமல் என கடந்த சில வாரங்களாகவே சூழல் நம்மை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. வீட்டுக்கு ஒருவராவது உடல்நலமில்லாமல் இருப்பதைக் கேள்விப்படுகிறோம். என்ன காரணம்…? சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலியிடம் பேசினோம்….தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி“2022 ஜூலை இறுதியில் தொடங்கி, 2023, ஜனவரி வரையிலுமே சளி, காய்ச்சல், தும்மல், இருமல், காய்ச்சல் இல்லாத சளி, இருமல் பிரச்னைகளுடன் நிறைய மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவது…

சிக்ஸரே இல்லாத லக்னோ டி20 போட்டி – ஆடுகளத்தை சாடிய ஹர்திக், கம்பீர் | lucknow t20 match india new zealand ends without six hardik gambhir slams wicket

லக்னோ: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஒரு சிக்ஸர் கூட ஸ்கோர் செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீரும் ஆடுகளத்தை சாடியுள்ளனர். இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய இந்திய அணி 19.5 ஓவர்கள் முடிவில் 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களே அதிகம்…

தமிழ்நாட்டில் 30-க்கு மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 30-க்கு மேற்பட்ட  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமனம். தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன் ஆகியோர் நியமனம் செய்துள்ளனர். விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம்  ஆட்சியராக பழனி நியமனம் செய்துள்ளனர். Source link

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முதன்முறையாக கமல் பங்கேற்பு: பிப். 2வது வாரம் ஈரோட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

* தலைவராக பொறுப்பேற்ற பின்பு பிரசாரத்துக்கு வரும் மல்லிகார்ஜூன கார்கே* கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ்.இளங்கோவனை எதிர்த்து அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. டிடிவி.தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகியவையும்…

“மார்பக அளவில் இல்லை ஆரோக்கியம்!'' – க்ரீம் முதல் உணவு வரை கற்பிதங்கள் களைவோம்

பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும்போதே பலருக்கும் தங்கள் உடல் குறித்த அக்கறை ஆரம்பித்துவிடுகிறது. அது அக்கறையாக இருக்கும்வரை பிரச்னையில்லை. ஆனால் அது உடல் குறித்த தாழ்வு மனப்பான்மையாக மாறும்போதுதான் பிரச்னையே… சரும நிறம் தொடங்கி, உடல் அளவு வரை எதுவும் இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு காரணமாகலாம். டீன் ஏஜில் பெரும்பாலான பெண்களை கவலைக்குள்ளாக்குவது மார்பக அளவு குறித்த உண்ணம். மார்பகங்கள் சிறியதாக இருந்தாலும் கவலை, பெரிதாக இருந்தாலும் கவலை என இவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம், அவர்களது…

‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் க்ரீன் இடம்பெறுவார்’ – ஆஸி. பயிற்சியாளர் தகவல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான கேமரூன் க்ரீன் இடம்பெறுவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்தியாவுடனான டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்திய அணி வலுவாக இருக்கிறது. அதற்கு சவால் விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் இருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது கேமரூன் க்ரீனுக்கு காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் அவர்…