இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் ராஜினாமா… உலகக்கோப்பை தோல்வியால் முடிவு
இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி காலிறுதிக்கு கூட முன்னேற முடியாத நிலையில் அவர் இந்த முடிவை இன்று அறிவித்திருக்கிறார். உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நடந்து முடிந்துள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த ஃபைனல் மேட்ச்சில் ஜெர்மனி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம்…