முஸ்லிம் மற்றும் யூத மதத்தினர் பின்பற்றும் சுன்னத் போன்ற சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?
கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesஹஸ்ரத் ஈசா (இயேசு கிறிஸ்து)வுக்குக் கூட அவர் பிறந்த எட்டாவது நாளில் விருத்தசேதனம் என்ற சடங்கு செய்யப்பட்டது. ஆனால் அவருக்குப் பிறகு வந்தவர்கள் இந்த சடங்கைக் கைவிட்டனர்.இன்றளவும், பல மரபுகள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக இருக்கின்றன. முக்கியமான நாட்களில் கூட்டு வழிபாடு செய்வது அதற்கொரு சான்று.கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்த குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வதில்லை என்பதற்கான பதில் பைபிளில் உள்ளது.பைபிளின் ‘புதிய ஏற்பாட்டின்’ படி, யூத மற்றும் கிறிஸ்தவ மதத்தில் விருத்தசேதனம் பற்றிய…









