Daily Archives: January 3, 2023

சர்ச் நிகழ்ச்சியில் சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு கேட்டரிங் நிறுவன லைசென்ஸ் ரத்து! | food poison – 70 hospitalised in kerala

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி செயின்ட் தாமஸ் சர்ச்சில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 29) ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 190 பேருக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. அதைச் சாப்பிட்ட சுமார் 100 பேருக்கு ஒவ்வாமையும் உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. சுமார் 70 பேருக்கும் மேல் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் இவர்கள் ரானி, அடூர், கொம்பநாடு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். இது…

மஞ்சள் நெய் அல்லது வெள்ளை நெய்… இரண்டில் எது சிறந்தது..?

இனிப்புகளாக இருந்தாலும் சரி, கார உணவு வகைகளாக இருந்தாலும் சரி, கொஞ்சம் நெய் சேர்த்தால் உணவின் மணமும் சுவையும் கூடிவிடும். சுவை என்பதைத் தவிர்த்து, நெய்யில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் எடை கூடி விடுமோ அல்லது கொலஸ்ட்ரால் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தால் பலரும் உடலுக்கு தேவையான நெய்யை உணவில் சேர்க்காமல் தவிர்க்கின்றனர்.நெய் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. நல்ல கொழுப்பு, புரதச்சத்து வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் கே…

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரியும் யானை கருப்பனை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரியும் யானை கருப்பனை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கபட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து முத்து, கபில்தேவ் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கபட்டது. Source link

தலைமை தேர்தல் அதிகாரி 2வது முறையாக தபாலில் அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக மீண்டும் மறுப்பு

சென்னை: தலைமை தேர்தல் அதிகாரி சாகு 2வது முறையாக தபாலில் அனுப்பிய கடிதத்தை ஏற்க அதிமுக மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரிமோட் வாக்கு எந்திரம் குறித்த விளக்க கூட்டத்தில் பங்கேற்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதால் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. Source link

குளிர்காலத்தில் வயதானவர்களைத் தாக்கும் நோய்கள்… தடுப்பு முறைகள்,தீர்வுகள்!

தற்போது பனிக்காலம் நிலவுகிறது. இச்சூழலில் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் பாதிக்கப்படுவர். இந்த நிலையில், மழை மற்றும் குளிர்காலங்களில் வயதானவர்களுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள், அவர்களுக்கான அவசரகால சிகிச்சை முறைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த தலைமை தீவிர சிகிச்சை மருத்துவர் அஜித்குமாரிடம் கேட்டோம்…தலைமை தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜித்குமார்“குளிர்காலத்தில் வயதானவர்களுக்கு வரும் உடல்நல குறைவுகளை, ஆங்கில எழுத்துகளான A முதல் I வரை…

இந்திய தொடரில் இருந்து நியூஸி., வீரர் மில்னே விலகல் | New Zealand player adam milne withdraws from Indian series

வெலிங்டன்: நியூஸிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணியானது இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 18-ம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கலந்து…

New Year 2023: 5 லட்சம் ஆர்டர்களைப் பெற்ற Swiggy, Zomato; முதல் இடம் பிடித்த பிரியாணி! | Zomato and Swiggy received more than 5 lakh orders on New Year’s evening

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினமான  டிசம்பர் 31-ம் தேதி இரவு மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர்  செய்துள்ளனர் என்று Zomato மற்றும் Swiggy உணவு டெலிவரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நிறுவனங்கள் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன.அதில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவுகளை ஆர்டர் செய்திருந்த நிலையில் பிரியாணி மற்றும் பீட்சா ஆகியவை பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 3.5 லட்சம் பேர் பிரியாணியும், 2.5 லட்சம் பேர் பீட்சாவும் ஆர்டர் செய்துள்ளனர். இதில்…

“மத்திய அமைச்சரானதே அதிமுக தயவில்தான்!” – அன்புமணியைச் சாடிய ஜெயக்குமார் | ADMK ex minister Jayakumar slams PMK president anbumani ramadoss

பா.ம.க சார்பில் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்பட்ட கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், “அ.தி.மு.க நாலா ஒடஞ்சிருக்கு, தி.மு.க மீது மக்களோட விமர்சனங்கள் பயங்கரமா இருக்கு. அடுத்து நாம தான் இருக்கோம். மத்தவங்களாம் வெறும் சத்தம் தான்” என்று அன்புமணி கூறியிருந்தார்.இந்த நிலையில் அ.தி.மு.க குறித்த அன்புமணியின் பேச்சுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அன்புமணியின் விமர்சனம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், “உண்மையில் ஒருபக்கம் வருத்தமும் வேதனையும். ஒருபக்கம் கடுமையான கண்டனத்தையும் நாங்க தெரிவிச்சிக்கிறோம்.அ.தி.மு.க…

எடப்பாடி பழனிசாமி கடிதத்தை திருப்பி அனுப்பிய நிலையில் தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் முடிவு

சென்னை: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கால கட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற தேர்தலையும், மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. அவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை மத்திய அரசும் சம்பந்தப்பட்ட…