Doctor Vikatan: சாக்லேட் கொடுத்தால் மட்டுமே உணவு உட்கொள்ளும் குழந்தை; தினமும் சாக்லேட் கொடுக்கலாமா? | Doctor Vikatan- A child who only eats chocolate; Can you give chocolate every day?
அதற்காக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதே தவறு என்று சொல்லவில்லை. எப்போதோ ஒரு முறை கொடுக்கலாம். அது பழக்கமாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே கொடுக்கும்போதும், நீங்கள் கொடுக்கும் சாக்லேட்டில் கஃபைன் இல்லாததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறைந்த கொழுப்பும் சர்க்கரையும் சேர்த்த சாக்லேட்டாக பார்த்துத் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் டார்க் நிற சாக்லேட்டுகள் ஓரளவு சிறந்தவை. அவற்றில் இனிப்பும் பிற சேர்க்கைகளும் குறைவாக இருக்கும்.எனவே எப்போதாவது, குறைந்த அளவு சாக்லேட் சாப்பிடுவது ஓகே. ஆனால்…