கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை
20 ஜூலை 2022புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில், குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், உடற்கூராய்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உடலைப்பெற்றுக்கொள்ளும்படி மாணவியின் இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (19.07.2022) மறு உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறுவதால் பெற்றோர் தரப்பில் ஆஜராக வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக…









