அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு ரூ6,664 கோடி ஒதுக்கியுள்ளது: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை
சென்னை: அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடைய ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளில் ரூ6,664 கோடியை ஒதுக்கியுள்ளது என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது தமிழகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்தவும், அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமகிர சிக்ஷா நிதி மூலமாக…









