அதிக முதலீடு செய்பவர்கள் அதிமுக தலைமைக்கு வரலாம்: மதுரையில் டிடிவி.தினகரன் பேச்சு
மதுரை: யார் அதிகமாக முதலீடு செய்கிறார்களோ, அவர்கள் அதிமுக தலைமைக்கு வரலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார். மதுரை சிந்தாமணியில் நேற்று ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: மக்கள் பணத்தை தண்ணீராக செலவழித்து கொண்டிருந்தவர்களால், ஜெயலலிதா, எம்ஜிஆரிடம் இருந்த தலைமை பதவி பணம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. தலைமை பதவியை ஏலம் போட்டு, ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி, தற்போது நீதிமன்றத்தில் குடுமிப்பிடி சண்டையில் போய்…









