அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி
நெல்லை: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளதாக நெல்லையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து…









