அதிமுக ஒன்றுபட வலியுறுத்தி அம்பையில் பரபரப்பு போஸ்டர்
அம்பை: அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தி அம்பையில் மாஜி நகராட்சி துணை சேர்மன் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என வெளியான தீர்ப்பையடுத்து, மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் கட்சி அலுவலகத்தை நொறுக்கி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற ஓபிஎஸ்சுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறி அந்த அழைப்பை நிராகரித்ததோடு, சென்னை ஐகோர்ட்டின்…









