பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமளவுக்கு காய்ச்சல் பாதிப்பில்லை – மா.சுப்ரமணியன்| There is no need to give holidays to schools – M. Subramanian
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்… அமைச்சர் மா.சுப்ரமணியன்”தமிழ்நாட்டில்…







