சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள், சிக்ஸர்களை விளாசிய சூர்யகுமார் யாதவ் | suryakumar yadav hit the most runs and sixes in a single year in international T20 cricket
திருவனந்தபுரம்: சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் 107 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில்…







