ஓபிஎஸ்-ஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
சென்னை: ஓபிஎஸிடம் இருப்பது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் யார் உண்மையான அ.தி.மு.க. என்ற சண்டை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே நீடித்து வருகிறது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…








