ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளால் தோல்வி; குஜராத்தில் கடினமான முடிவுகள் எடுக்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு
புதுடெல்லி; குஜராத்தில் ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகளால் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. அங்கு கடினமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எங்களைப் பொறுத்தவரை குஜராத் முடிவுகள் சுயபரிசோதனை செய்ய வேண்டியதையும், கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகின்றன. ஏனெனில் குஜராத் தேர்தல் முடிவுகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. எங்கள் எதிர்பார்ப்புகளை விட மிகக் குறைவாக உள்ளன. இது குஜராத் கட்சி அமைப்பின் பாதிப்பு…









