தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக வரிசையில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக அமருவார்களா?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அஇஅதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் நிலவும் நிலையில், எடப்பாடி தரப்பு புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரைத் தேர்வு செய்துள்ளது. அதை ஏற்கக்கூடாது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு. என்ன நடக்கும்?அஇஅதிமுகவின் தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடவிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ.…








