உள்நாட்டில், வெளிநாடுகளில் குஜராத் பெயரை கெடுக்க சதி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
புஜ்: உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குஜராத்தின் பெயரை கெடுக்க சதிகள் நடந்தன,’ என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி, 2வது நாளான நேற்று கட்ச் மாவட்டத்தின் புஜ் பகுதிக்கு சென்றார். 2001ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 13,000 பேர் பலியாயினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 470 ஏக்கரில் கட்டப்பட்ட பிரமாண்ட நினைவிடத்தை…









