தாயை பாலியல் வல்லுறவு செய்தவர்களை 28 ஆண்டுகளுக்குப் பின் நீதியின் முன் நிறுத்திய மகன்
ஆனந்த் ஜனானேலக்னௌவிலிருந்து பிபிசி செய்தியாளர்32 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, சித்தரிப்பு படம்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவிருக்கிறது. தன் தாயின் 12 வயதில் நடந்த அநீதிக்காக 28 ஆண்டுகள் கழித்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார், 13 ஆண்டுகளுக்கு முன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட மகன். இதில் நடந்ததும் நடப்பதும் என்ன? ஆறு மாதங்கள் பாலியல் தொல்லை28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த வேதனையான சம்பவத்தைப் பற்றி அறிய, பிபிசி, பாதிக்கப்பட்ட…