Doctor Vikatan: காலை உணவை தவிர்ப்பது தவறா? பசியே இல்லாவிட்டாலும் அவசியம் சாப்பிடத்தான் வேண்டுமா? | doctor vikatan – Is it wrong to skip breakfast
Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? காலையில் சாப்பிடத் தோன்றாதவர்கள், கட்டாயப்படுத்தியாவது காலை உணவுப்பழக்கத்தைத் தொடரத்தான் வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன்காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி, பல காலமாக, பலருக்கும் இருப்பதுதான். சில குடும்பங்களில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான நேரத்தில் முழுமையான உணவை சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதையடுத்து மதியத்துக்கும் மாலைக்குமான…







