ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு எதிரொலி ஓபிஎஸ், சசிகலா ரகசிய பேச்சு: தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம்; முன்னாள் அமைச்சர் ஒருவர் இடம் மாற தயாராகி வருவதால் பரபரப்பு
சென்னை: ஒன்றிணைய எடப்பாடி மறுப்பு தெரிவித்ததையடுத்து சசிகலாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக, தென்மாவட்ட நிர்வாகிகளை முழுமையாக இழுக்க அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பின் மூலமாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த வெற்றியை அடுத்து மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று எடப்பாடிக்கு ஓபிஎஸ் பகிரங்கமாக…








