ரூட், பட்லர், ஸ்டோக்ஸுக்கு கேப்டன்சி செய்த வீரர் மீதே நிறவெறி பயங்கரம்- அம்பலமாகும் யார்க் ஷயர் இனவெறி
இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்புகளில் யார்க்ஷயர் கிளப்தான் மிக மிக மோசமான நிறவெறி முன் தீர்மானங்களைக் கொண்டது என்றும் தான் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றதாக அந்த அணிக்கு ஆடிய அஜிம் ரபீக் என்ற ஆஃப் ஸ்பின்னர் நிறவெறி குற்றச்சாட்டை எழுப்ப அது இங்கிலாந்தையே தற்போது உலுக்கி வருகிறது.இவர் நிறவெறிப் பிரச்சனைகளைக் கிளப்பிய பின்பு மூத்த அதிகாரிகள் கிளப்பிலிருந்து ராஜினாமா செய்வதும், ஸ்பான்சர்கள் வெளியேறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஜீம் ரபீக் யார்க் ஷயருக்காக 2008-14 மற்றும்…








