Daily Archives: July 8, 2022

பொய் பாலியல் புகார்: ரூ.5 லட்சத்துக்கு ஸ்கெட்ச்; உதவிக்கு 3 வழக்கறிஞர்கள் – உ.பி-யில் இளம்பெண் கைது! | Woman, lawyers arrested for lodging false rape complaint in UP

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிலுள்ள ஹரி பர்வத் பகுதி காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி 28 வயதான பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், “20 வயதான ராகுல் சிகர்வார் என்பவர் என்னுடையப் பிறந்த நாளை கொண்டாட ஒரு ஹோட்டலுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துகொடுத்து நான் மயக்க நிலையில் இருக்கும்போது என்னைப் பாலியல் வன்கொடுமைசெய்து அதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தை யாரிடமாவது கூறினால் அதை பகிரங்கப்படுத்துவேன்…