அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!
சென்னை: அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் நிலவும் நிலையில் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள வி.கே.சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி; தற்போது இந்த பயணம் தொண்டர்களை ஒன்றிணைப்பதற்கான பயணம் என்றும், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவதே நோக்கம் என்றும் தெரிவித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒற்றைத் தலைமை சின்னம்மா என்று முழக்கங்களை எழுப்பினர்.…








