திடீர் பேட்டியால் பரபரப்பு எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி முடித்த தங்கபாலு
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்கபாலு, நேற்று காலை திடீரென அவசர பத்திரிகையாளர் சந்திப்பை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டினார். அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படாததால் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால், திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு குறி வைத்தவர் தங்கபாலு. அது ப.சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்தார். எனவே முக்கிய முடிவுகளை அறிவிக்கப் போகிறார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனல் சாதி வாரி கணக்கெடுப்பை பற்றி சொல்லி பரபரப்புக்கு…









