‘தருமம் மறுபடியும் வெல்லும்’… அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப் போக்கு நிலவி வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம்!!
சென்னை : ‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச்…









