ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா… அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? | Who Is Afreen Fatima?
முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக்…









