Daily Archives: June 8, 2022

Team India: ஹர்திக், தினேஷ் கார்த்திக்கின் வருகை; T20 உலகக்கோப்பைக்கான டிராவிட்டின் பிளான்!

சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் பக்கம் மீண்டும் கவனத்தைத் திரும்பியிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். எதிர்பாராத அதிரடிகள், ஏராளமான ஆச்சரியங்கள் என ஓர் அசத்தலான ஐ.பி.எல் நிறைவடைய, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா முதலிய சீனியர்கள் தொடங்கி உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் என பலரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.Bishnoi – Umran Malik – Arshdeep தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைய தினம் தொடங்கவுள்ள நிலையில் சீனியர்கள்…

ghee vs butter which is better

அதிக கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் உள்ள பொருட்கள் என்று வெண்ணெய் மற்றும் நெய் ஆகிய இரண்டையுமே மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தவிர்க்க சொல்வார்கள். குறிப்பாக வெண்ணெய் மற்றும் நெய் சேர்த்து செய்யப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதோடு மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கும்.இதனால் இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதே நேரத்தில் வெண்ணெய் மற்றும் நெய் என்பது டிரான்ஸ்கொழுப்பு உணவுகள் கிடையாது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன.…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 28 – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பழக்கத்துக்கு எதிராக போராட வேண்டும். என்சிசி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் 2) மின்சார கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடும் வகையில் மொபைல் செயலி அறிமுகம். ஒன்றாம் தேதி முதல் சோதனை முறையில் செயல்படுத்த ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு. 3) மக்கள்நலன் சார்ந்ததாக அரசின் கொள்கை முடிவு இருக்க வேண்டும். மதுவிலக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து 4) மாணவி தற்கொலை…

9வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த மார்ச் 8ம் தேதியுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின்னர் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதற்கான ஆயத்தப் பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இந்தியாவில் 70 கோடிக்கும் கூடுதலான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உண்டு. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆணையம் செயல்பாட்டில்…

புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து; வரலாற்றிலேயே முதல்முறையாக வெற்றி பெற்ற ஆய்வு!-|First in History – Cancer Vanishes For Every Patient In Drug Trial

தொடர்ந்து மூன்று வாரங்கள் என ஆறு மாத காலத்திற்கு தொடர்ச்சியாக இவர்கள் அனைவருக்கும் இந்த மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் புற்றுநோயின் அறிகுறிகளும், கட்டிகளும் மறைந்ததோடு, அனைவரும் குணமடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.புற்றுநோய் வரலாற்றிலேயே முதல்முறையாக இது சாத்தியமாகியுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவர் லூயிஸ் ஏ.டயஸ் தெரிவித்துள்ளார்.Cancer -Representational ImagePhoto by Conscious Design on Unsplashஅவர் மட்டுமல்ல, வரலாற்றில் முதன்முறையாக இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளதாக மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும்…

333 போட்டிகள், 10868 ரன்கள்; 23 ஆண்டுகள் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு! | indian women cricketer mithali raj retires from international cricket

சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868…

தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து – செட்டிநாட்டு மீன் குழம்பு

தொகுப்பு, படங்கள்: வி.சாமுவேல் எப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள். நன்றி

நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

டெல்லி: நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பேட்டியளித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. Source link

கருமுட்டை விற்பனை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: கருமுட்டை விற்பனை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பல ஆண்டுகளாக கருமுட்டை எடுக்கப் பயன்படுத்தி, அதைத் தனியார் மருத்துவமனைகள் மூலம் விற்பனை செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளுக்கும் கருமுட்டை விற்றுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு…

Doctor Vikatan: திடீரென உருவான மச்சம்; அழகா… ஆபத்தா? -Is it normal for a new mole to appear?

என் வயது 49. திடீரென முதுகில் ஒரு மச்சம் தோன்றியுள்ளது. அது ஒரே அளவில் இல்லாமல் வளர்வது போல உணர்கிறேன். இது சாதாரண மச்சம்தானா… அல்லது வேறு பிரச்னையின் அறிகுறியாக இருக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம் மச்சம் என்பதை பலரும் அழகு சார்ந்த விஷயமாகவே பார்க்கிறார்கள். எல்லா மச்சங்களையும் அழகு என்று நினைத்துக் கடந்துபோக முடியாது. சில வகை மச்சங்கள் ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.மருத்துவர் தலத்…

1 2 3