2024 தேர்தலின் புதிய ஆயுதம்: மீண்டும் இந்தி தீ!..டெல்லியில் காய் நகர்த்தும் பாஜ
‘பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டி விடுவது’ என்ற பழமொழி ஒன்றிய பாஜ அரசுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியது. ஒருபுறம், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் சிறப்புகளை பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி. ஆனால் மறுபுறம், இந்தியை தேசிய மொழியாக்க அமித்ஷா போன்ற பாஜ தலைவர்கள், வரிந்து கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, ‘இந்தியாவில் அனைத்து பகுதியிலும் உள்ள மக்களின் தகவல் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஆங்கிலமாக…








