RR v RCB: பெங்களூரின் உயிர் பெற்றிடாத `ஈ சாலா' கோஷம்; ராஜஸ்தானின் பைனல்ஸ் கனவை நனவாக்கிய பட்லர்!
வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். மறுபுறம் ஆர்சிபியோ வழக்கம்போல அனைத்துத் தவறுகளையும் செய்து தங்களது கோப்பைக் கனவை அடுத்த வருடத்திற்கும் நீட்டித்துள்ளது.கோலியின் சதத்திற்காக மட்டுமல்ல, ஆர்சிபியின் கோப்பைக் கனவுக்கும் சுபம் போட முடியாமல் ரசிகர்களின் காத்திருப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களால் ஓங்கி ஒலித்த `ஹல்லா போல்’-லால், ஈனஸ்வரத்தில் கேட்காமலே போனது, `ஈ சாலா கப் நம்தே’ கோஷம்.டாஸைத் தோற்பதில்…









