‘வெற்றியை பெரிதாகக் கொண்டாட மாட்டார் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி விட்டு உடனே தூங்கப் போய்விட்டார்’- மகனைப் பற்றி தந்தை
செஸ்ஸபிள் செஸ் தொடரில் இறுதிப் போட்டியில் சீன வீரரை ஒரு கட்டத்தில் திக்குமுக்காடச் செய்த சென்னையை சேர்ந்த யங் செஸ் ஜீனியஸ் பிரக்ஞானந்தா பொதுவாக வெற்றிகளை ஆ.. ஊ… என்றெல்லாம் கொண்டாடும் பழக்கமில்லாதவராம், மேதை கார்ல்சனை வீழ்த்தி விட்டு பெரிய கொண்டாட்டமெல்லாம் இல்லாமல் உடனே தூங்கப்போய்விட்டாராம் பிரக்ஞானந்தா, இதனை அவரது தந்தை ரமேஷ் பாபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.“எங்களைப் பொறுத்தவரை அவர் இன்னமும் குழந்தைதான். சில வேளைகளில் குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவான். அவன் அம்மாதான் அவனுக்கு லஞ்ச் பேக் செய்து…








