ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக அரசு மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்துகிறது: ஆர்.எஸ் பாரதி பேச்சு
வாலாஜாபாத்: திமுக ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாள்தோறும் செய்து வருகிறது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்பி செல்வம் முன்னிலை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர்…