அமெரிக்காவில் சமைத்ததும் அபாய அலாரம் அடித்ததும் | விருந்தோம்பல் | வெஜ் மோமோஸ்
2005-ம் ஆண்டு திருமணத்துக்குப் பின் சென்னையிலிருந்து அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா சென்றதுதான் என் முதல் விமானப் பயணம். சென்னையிலிருந்து ஜெர்மனி வரை முதல் பயணம். பின் ஜெர்மனியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ். நாங்கள் சென்றது ஏர் இந்தியா விமானம் என்பதால், பயணம் தொடங்கியது முதல் இறங்கும் வரை நம் நாட்டு உணவுகளே வகை வகையாகக் கிடைத்தன. ஒவ்வொரு வேளையும் சிறிய டிரே, பவுல், அதற்கேற்ற குட்டி ஸ்பூன், ஃபோர்க் வைத்து பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.லாஸ் ஏஞ்சல்ஸில் இறங்கியதும் எங்கு…