2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறார் மிட்செல் மார்ஷ் | Mitchell Marsh to play in 2nd Test cricket match

Share

அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிராக பெர்த் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷுக்கு பந்து வீச்சின் போது கணுக்காலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர், வரும் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. இதற்கிடையே அவருக்கு மாற்று வீரராக பியூ வெப்ஸ்டரை அணியில் சேர்த்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

இந்நிலையில் 33 வயதான மிட்செல் மார்ஷ் கூறும்போது, “எனது உடல் நிலை நன்றாக இருக்கிறது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் நான் விளையாடுவேன்” என்றார்.

மிட்செல் மார்ஷ் உடற்தகுதியுடன் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம் அளிக்கக்கூடும். ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com