
தற்போதுள்ள சூழலில் ஆசிரியர்களுக்கான பணிச்சுமையும் அதிகரித்துவிட்டது, மாணவர்கான மனச்சுமையும் அதிகரித்துவிட்டது. எந்த பிரச்சனை எப்போது எந்த ரூபத்தில் வரும் என்ற அச்சத்திலேயே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும் மாணவர்களை வழிநடத்துவதில், அறிவுறுத்துவதில் ஆசிரியர்கள் ஒருவித சுதந்திரயின்மையோடு இருக்கிறார்கள். திமுக அரசின் முக்கிய திட்டமான இல்லம் தேடி கல்வி இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. முதியோர் கல்வியும் இல்லம் தேடி கல்வியும் ஒன்றுதான். பள்ளிக்கூட தேடி வரும் கல்வியே கேள்விக்குறியாக இருக்கும் போது இல்லம் தேடி வரும் கல்வி எப்படி இனிமையாக அமையும் என்பதே என் கேள்வி.