என அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்
நீமன் இதற்கு முன்பே சில வலைதளங்கள் நடத்திய போட்டிகளில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், “சமீபத்தில் அதுவும் கார்ல்சனுக்கு எதிரான Over the board போட்டியில் நேர்மையாகவே ஆடியிருந்தேன். வேண்டுமானால், நிர்வாணமாக அமர்ந்து கூட போட்டிகளில் ஆடி என்னுடைய திறனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்” என நீமன் கூறியிருக்கிறார்.
19 வயது இளைஞருக்கு எதிராக ஆதாரமே இல்லாமல் அபாண்டமாகக் குற்றம்சாட்டுகிறார் என கார்ல்சனுக்கு எதிராகவும், செஸ் போட்டிகளில் இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளையும் ஏமாற்றுக்காரர்களையும் ஒழிக்க வேண்டுமென கார்ல்சனுக்கு ஆதரவாகவும் இருதரப்பிலிருந்து விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.