18 – 25 வயதுடையவர்களுக்கு இனி ஆணுறை இலவசம் – பால்வினை நோய்களை தடுக்க அரசு அதிரடி!|18 – 25 year olds get free condoms

Share

பிரான்ஸ் நாட்டில் உண்டாகும் தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்கவும், பால்வினை நோய்களைத் தவிர்க்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு இலவச ஆணுறைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார். 

பிரான்ஸ் நாட்டில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பால்வினை நோய்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இம்மானுவேல் மாக்ரான்

இம்மானுவேல் மாக்ரான்

இதுகுறித்து இம்மானுவேல் மாக்ரான் கூறுகையில்,“தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களைக் குறைக்கவும் 18 முதல் 25 வயதுள்ளவர்களுக்கு மருந்தகங்களில் ஜனவரி 1 முதல் ஆணுறைகள் இலவசமாகக் கிடைக்கும். மேலும் இது கருத்தடைக்கு எதிரான சிறிய புரட்சி. ஆணுறைகள் இலவசமாகக் கிடைக்கும் என்ற இந்தத் திட்டம், 25 வயதுக்குக் கீழுள்ள பெண்கள் பிறப்பு கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் வகையில் இருக்கும். 

இந்த விஷயம் குறித்து ஆசிரியர்களுக்குச் சிறந்த கல்வியை அளிக்க வேண்டி உள்ளது” என்று பாலியல் கல்வி குறித்துத் தெரிவித்துள்ளார்.     

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com