10 minutes chicken gravy recipe

Share

என்னதான் நாம் வார நாட்களில் பரபரப்பாக உழைத்தாலும் வீக் எண்ட் வந்துவிட்டாலே சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறு கேட்காது. வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இதுபோன்ற சமயத்தில் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைக்கொடுக்கும். எப்படி என்று மேலும் படிக்கவும்…

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் –2

சீரகத்தூள் – 1/2 tsp

மிளகாய் தூள் – 1/2 tsp

மல்லித்தூள் – 1/2 tsp

கரம் மசாலாத்தூள் – 1/2 tsp

மிளகுத்தூள் – 1 tsp

கஸ்தூரி மேத்தி – 1 tsp

இஞ்சி பூண்டு விழுது – 1 tbsp

எண்ணெய் – 2 tbsp

வெண்ணெய் – 1 tbsp

நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்கு சுத்தம் செய்து ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதோடு கொடுக்கப்பட்டுள்ள தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இறுதியாக எண்ணெய் , உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

சுட சுட சிக்கன் பிரெட் பஜ்ஜி… மாலையில் ஒரு கப் டீ யுடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும்..! ரெசிபி இதோ

இப்போது கடாய் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உருகியதும் இந்த கலவையை சேர்த்து நன்கு கிளறிவிட்டு சிறு தீயில் வைத்துவிட்டு தட்டு போட்டு மூடிவிடுங்கள்.

அவ்வளவுதான் அவ்வபோது கிளறிவிட 10 நிமிடத்தில் செட்டிநாடு சிக்கன் கிரேவி தயாராகிவிடும்.

இதில் தண்ணீர் எதுவும் ஊற்றத்தேவையில்லை.

 

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com