விநாயகர் என்றாலே கொழுக்கட்டை என்று தான் என்பது நினைவுக்கு வரும். விநாயகருக்கு மோதக பிரியர் என்று பெயரே இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு தவறாமல் இடம்பெறும் உணவுகளில் கொழுக்கட்டையும் ஒன்று. வித விதமான கொழுக்கட்டைகள் இருந்தாலும், தேங்காய் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. 31 ஆகஸ்ட் 2022 அன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு, கட்டாயமாக கொழுக்கட்டைகள் செய்வீர்கள்.
பொதுவாக கொழுக்கட்டை என்றாலே அரிசி மாவில் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாக கேழ்வரகு மாவு, சிவப்பு அரிசி மாவு கொழுக்கட்டை மற்றும் சிறு தானியங்களை மாவாக அரைத்து, அதை வேகவைத்து அரிசி கொழுக்கட்டை போலவே பலரும் செய்து வருகிறார்கள்.

கொழுக்கட்டையில் வைக்கப்படும் பூரணம் தான் அதற்கு சுவையை மேம்படுத்துகிறது, வேறுபடுத்திக் காட்டுகிறது. இனிப்பு கொழுக்கட்டைங்களில், தேங்காய் வெல்லப் பூரண கொழுக்கட்டை, தேங்காய் சர்க்கரை கொழுக்கட்டை, கடலைப் பருப்பு சர்க்கரை கொழுக்கட்டை, கடலைப் பருப்பு தேங்காய் கொழுக்கட்டை உள்ளிட்ட பலவிதமான கொழுக்கட்டைகள் உள்ளன. பொதுவாக அரிசி மாவில் செய்யப்படும் கொழுக்கட்டைக்கு வெல்லப்பாகுடன் தேங்காய் சேர்த்து கிளறி செய்யப்படும் தேங்காய் பூரணம் மிகவும் சுவையாக இருக்கும்.
விநாயகர் சதுர்த்திக்கு என்ன படைக்கலாம்.. ஆல் இந்தியா லிஸ்ட் உங்களுக்காக…
ஒரு சில வீடுகளில், எள்ளு வெல்லம் சேர்த்து எள்ளு கொழுக்கட்டையும் செய்வார்கள். அரிசி மாவாக அரைத்து, அதை வேகவைத்து, கிளறி… இதற்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகும்! மாவில்லாமல், 10 நிமிடங்களில் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் தேங்காய்த் துருவலோடு சுவையான கொழுக்கட்டை தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

இன்ஸ்டன்ட் தேங்காய் கொழுக்கட்டை செய்வது எப்படி?
கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்கள்:
நெய் – தேவையான அளவு
தேங்காய்த் துருவல் – 2 கப்
கன்டன்ஸ்டு மில்க் – 4 கப்
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு, சூடான பின்பு, தேங்காய்த் துருவலை சேர்க்கவும். மிதமான அல்லது குறைவான தீயில் 5 முதல் 6 நிமிடங்களில், பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த தேங்காய் துருவலில் கொஞ்சம் கொஞ்சமாக கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கலவை தயாரான பின்பு, சிறிய பந்துகளாக உருட்டி, மோதகம் செய்யும் மோல்டில் வைத்து, பிரஸ் செய்து எடுத்தால், சுவையான இன்ஸ்டன்ட் தேங்காய் கொழுக்கட்டை தயார்.
உங்களுக்கு விருப்பமென்றால், உலர் பழங்கள், நட்ஸ், ஆகியவற்றை தேங்காய் கலவையில் சேர்த்து மோதகம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.