ஹோல் வீட் பிரெட் உண்மையில் உடலுக்கு நல்லதா? – டயட்டீஷியன் விளக்கம் | Is it whole wheat bread good for health?

Share

“பிரெட் எப்போது ஆரோக்கியமற்ற உணவுப் பொருளாக மாறுகிறது?”

“பிரெட்டில் அதை வெள்ளை நிறத்தில் மாற்றக்கூடிய அடிடிவ்ஸ் (additives) மற்றும் பதப்படுத்தப்பட்ட மாவு உள்ளிட்ட பொருள்கள் ஒன்றாகச் சேரும்போது, பிரெட் ஆரோக்கியமற்ற உணவாக மாறுகிறது.

வெள்ளை ரொட்டியை அதிகமாக உட்கொண்டால் உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் காலை நேரங்களில் பிரெட்டை உட்கொள்ளவே கூடாது. மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

சில உற்பத்தியாளர்களால் சேர்க்கப்படும் ஹைட்ரோஜினேடெட் (hydrogenated) கொழுப்புகள், உடலிலுள்ள நல்ல கொழுப்புகளை அழித்து, தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிலர், பிரவுன் நிற பிரெட் ஆரோக்கியம் என நினைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், பெரும்பாலான பிரவுன் பிரெட்களில் கேரமல் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, பிரெட் வாங்குவதற்கு முன் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களின் அளவுகளைச் சரிபார்ப்பது நல்லது.”

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com